Wednesday 28 July 2010

எந்தக் கொடுமை பற்றி யார் பேசுவது?

ன்ன கொடுமையடா இது,” என்று கேட்டு தினமணி ஜூலை 27 இதழில் ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார் பாஜக தலைவர் இல. கணேசன். ஆம், அரிவாள் தீட்டுவது போல் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். மக்கள் ஒற்றுமையை வெட்டுகிற அரிவாள்தான் அந்தக் கட்டுரை.

எதைக் கொடுமை என்று சொல்கிறார்? பாஜக-வை மதவாதக் கட்சி என்று காங் கிரஸ் தலைவர்கள் சொல்லிவிட்டார் களாம். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பாஜக-தானாம். இப்படி நகைச்சுவையாகத் தொடங்கி, பத்திக்கு பத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்துக்களின் கோபத் தைக் கிளரும் கரசேவையைச் செய்தி ருக்கிறார் கணேசன்.

நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத் தில், முஸ்லிம் மக்களை தாஜா செய்ய அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முயன்ற தால், இறுதியில் அது நாட்டை வெட்டியதில் போய் முடிந்தது என்று மிகச் சாதுரியமாக வெறுப்புத் தீயை மூட்டிவிடும் உத்தியைக் கையாண்டிருக்கிறார். இந்தியா முன்னொரு காலத்தில் ஒரே ஆட்சியின் கீழ் ஒரே நாடாக இருந்தது என்றும், பின்னர் முஸ்லிம் தலை வர்களின் பிடிவாதத்தால்தான் இந்தியா-பாகிஸ்தான் என பிரிந்தது என்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்து வாக் கூட்டம் மக்கள் மனங்களில் பதிய வைப் பதற்குத் திரும்ப திரும்ப முயல்கிறது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு, முகலாயர் ஆட்சிக்கு முன்பு துண்டு துக்காணியான சின் னஞ்சிறு ராச்சியங்கள் இந்த மண்ணில் இருந்தன. வரலாற்றின் கடைசி சில நூற் றாண்டுகளில்தான் ஒவ்வொரு ராச்சியமாக இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதில் முகலாயர், ஆங்கிலேயர் இரு ஆட்சிகளுக்குமே பங்கு உண்டு.

இந்த உண்மையை மறைத்து ஒரே நாடாக இருந்தது போலவும் அதை இஸ் லாமியர் இயக்கம் துண்டாடியது போலவும் கீறல் விழுந்த பழைய கிராமபோன் ரிக்கார்டு போல சொல்லிக்கொண்டே இருப்பதில் ஒரு தீய உள்நோக்கம் இருக்கிறது. ஒரே நாடு என்ற உணர்ச்சிப்பூர்வமான எண்ணத்தைக் கிளறிவிட்டு, இன்று அப்படி இல்லாமல் போனதற்குக் காரணம் அன்றைய இஸ்லா மியர்கள்தான் என்ற சிந்தனையைப் பதிய வைத்து, இன்றைய முஸ்லிம் மக்கள் மீது பகையுணர்வை வளர்ப்பதே அந்தத் திட்ட மிட்ட உள்நோக்கம்.

அன்றைக்கு முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டும் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந் தும்தான் மாறினார்கள் என்ற மோசடியான தகவலையும் இந்துத்துவாக் கூட்டம் பரப்பு கிறது. அதே நோக்கம்தான் அப்போது காங் கிரஸ் இயக்கத்தில் இருந்த சுவாமி சிரத் தானந்தா என்பவர், மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதம் திருப்பும் பணியை நடத்தியதாக ஒரு செய்தியைச் செருகி யிருக்கிறார் கணேசன்.

அன்று இந்துக்களில் பலர்-குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள்-மதம் மாறியதற்கு முக்கியமான காரணம் உயர் சாதி என தங்களை வரித்துக்கொண்ட ஆதிக்கக் கூட்டத்தினரின் வரம்பில்லாத தீண்டாமைக் கொடுமைகள்தான். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று போதித்த மதங் களுக்கு அவர்கள் மாறியது ஒரு இயல்பான முனைப்பு. தாங்கள் அதுவரை நம்பி வணங்கிய கடவுளையே மாற்றிக் கொள்ளத் துணிந்தார்கள் என்றால், எந்த அளவிற்கு மனு அதர்மம் ஆட்டம் போட்டிருக்கும்!

மதம் மாறியவர்களை ஏதோ பாவம் செய்து விட்டவர்கள் போல சித்தரித்து, மறுபடியும் இந்து மதத்திற்கு மாற்றும் ஆத்திரமூட்டும் கைங்கர்யத்தை, அன்றே இவர்களது முன் னோடிகள் தொடங்கிவிட்டார்கள் என்பதை கணேசன் கட்டுரை காட்டிக் கொடுக்கிறது. ஆனால், அதிலேயும் ஒரு வரலாற்றுத் திரிபு வேலையைச் செய்கிறார். தில்லி ஜூம்மா மசூதி முன்பாக நின்று நாட்டின் விடு தலைக் காக இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்க வேண் டும் என முழக்கமிட்ட சுவாமி சிரத்தானந்தா என்பவரை ஒரு மதவெறியன் சுட்டுக்கொன் றது உண்மை.

ஆனால், கணேசன் தனது நோக் கத்திற்காக அந்த நிகழ்ச்சியையே புரட்டிக் கூறியிருப்பதில் மதப் பகைமையைத் தூண்டு வது என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவு.

வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் முயற்சி யின் ஒரு சிறு பகுதியாக இன்று முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சில சட்டப் பூர்வ சலுகைகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அரசமைப்பு சாசனப்படி அமைக் கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை நிலை மிக வும் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கண் டறிந்து, அவர்களுக்கான ஒரு சமூகநீதி ஏற் பாடாக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு, நிதி உதவிகள் உள்ளிட்ட நியா யமான பரிந்துரைகளை முன்வைத்தது. அதன் நியாயத்தை உணர்ந்தே மதச்சார்பற்ற சக்திகள் வரவேற்கின்றன. இப்படிப்பட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளை முறையாகச் செயல் படுத்த வேண்டும் என்கிற போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத்தான் பாஜக தலைவர்களும் அவர்களது குரு பீடமாகிய ஆர்எஸ்எஸ் தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனால்தான் ஏட்டிக்குப் போட்டியாக ஆதிக்கசாதி இந்துக்களுக்கும் இட ஒதுக் கீடு என்ற மந்திரத்தை உச்சரித்தபடி ஆர்ப் பாட்டங்கள் செய்கிறார்கள். கொட்டிய பிறகும் தேள் என்று புரிந்துகொள்ளாதவர் களை என்ன வென்று சொல்வது? நாட்டை வெட்டிய பிறகும் புரிந்துகொள்ளாதவர்களை என்ன செய்வது... என்று கணேசன் எழுதியிருக் கும் வரிகளின் ஒவ்வொரு சொல்லிலும் அளவற்ற மதக் குரோதம்தான் ஊறிப்போயிருக்கிறது.

சிறுபான்மை மக்களின் மதத் தேர்வை அங்கீகரிக்க மறுக்கும் அகம்பாவத்தின் உச்ச மாகவே, இந்த நாட்டில் வாழும் முஸ் லிம்களும் கிறிஸ்தவர்களும் அந்நிய நாட்டி லிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம் மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண் பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக் களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று, என்ற வரிகளை எழுதியிருக்கிறார். ஒரே மக்கள் என்ற ஒற்றுமை உணர்வை வலி யுறுத்தும் வரிகள் போல தெரியும். இந்தக் கானல் நீர் வரிகள் உண்மையில் சிறு பான்மை மக்களின் சொந்த மத உணர்வு களை சிறுமைப்படுத்தும் நச்சு முட்களே.

காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை என்பது, வாக்கு வங்கி நோக்கத்திற்காக எல்லா மதவாதத்தோடும் சமரசம் செய்துகொள் வதுதான். இதை இடதுசாரி இயக்கங்கள் எப் போதுமே சுட்டிக்காட்டி விமர்சித்துவந் துள்ளன. ஆனால் அதற்காக பாஜக ஒரு மதச்சார்பற்ற இயக்கம் என்று இல.க. கூச்ச மில்லாமல் எழுதுவதைப் பார்க்கும்போதுதான் இப்படிக் கேட்கத் தோன்றுகிறது: என்ன கொடுமையடா இது?

No comments: