“அன்னிக்கு எலான் மஸ்க் உழைக்காமலே சாப்பிடலாம்னு சொன்னது பத்தி நாம பேசினதை உங்க கட்டுரையிலே சேர்த்திருந்தீங்க. நேத்து பேசிக்கிட்ட மேட்டரை கண்டிப்பா ஸ்டேட்டஸ் போடுவீங்கன்னு நினைச்சேன். போடலையே…”
“வழக்கம்போல நேத்தும் பல செய்திகள் பத்திப் பேசினோம். நீங்க எதைச் சொல்றீங்க?”
“அதான் சார், தவெக விஜய் தீய சக்தி, தூய சக்தின்னு பேசினாரே, அதைப் பத்தி இவரு கேட்டாரு. அதுக்கு நீங்க ஒரு பதிலைச் சொன்னீங்கல்ல, அதைத்தான் சொல்றேன்…”
காலை நடை நிறைவு நிகழ்ச்சியான பூங்கா இருக்கை உரையாடலில் நண்பர் அடுத்தவரைக் கைகாட்டிக் கேட்டார்.
“முக்கியமான ஒரு புத்தக சரிபார்ப்பு வேலை… இந்தா அந்தான்னு இழுத்துக்கிட்டே போகுது. அதனால நம்ம பேசிக்கிட்டதைப் பதிவு செய்ய நேரம் வாய்க்கலை. அதுதான் காரணம்.”
“சார், திருமாவளவன் கூட அவருக்கு யாரோ அடுக்கு மொழியிலே பேசுறதுக்குக் கத்துக்கொடுத்திருங்கான்னு தெரியுதுன்னு சொல்லியிருந்தாரு. அதையெல்லாம் ரெஃபர் பண்ணி நான் கேட்டதுக்கு நீங்க சட்டுனு பதில் சொன்னீங்க, அது எனக்குப் பிடிச்சிருந்துச்சு, டெஃப்னட்டா அதை ஸ்டேட்டஸ் போடுவிங்கன்னு நீங்க போனப்புறம் நாங்க பேசிக்கிட்டோம்.” –அந்த இரண்டாவது நண்பர் கூறினார்.
“ஓ… அதை நான் பெருசா நினைக்கலை, ஆனாலும் இப்ப வீட்டுக்குப் போனதும் பதிவேத்தம் பண்ணிடுறேன். சரி, நான் என்ன சொன்னேன்னு ஞாபகப்படுத்துங்களேன்…”அதா
“அதான் சார், தீய சக்தின்னு அரசியல் எதிரிகளை நினைச்சா வெளிப்படையாவே எதிர்கொள்ளலாம், தேர்தல் மூலமாக் கூட தூய்மைப்படுத்தலாம், ஆனா சித்தாந்த எதிரிகளா நினைக்கிற சக்திகள் சமுதாயத்துக்கே பெரிய கேடு, முதுகுக்குப் பின்னால சூழ்ச்சிகள் செய்றவங்களை எதிர்கொள்றது அவ்வளவு ஈஸியில்லைங்கிற மாதிரி சொன்னீங்க…”
“ஆமா, அவங்களால ஏற்படுற தீமையைத் தடுக்கிறதுக்கு, உண்மையான சமுதாய அக்கறையும் தெளிவான பார்வையும் விரிவான இய்க்கமும் தேவைப்படும்னும் சொன்னேன்.”
முதலாவது நண்பர் குறுக்கிட்டார். “அதைச் சொன்னப்ப உங்க வாய்ஸ்ல ஒரு கவலை இருந்ததைக் கவனிச்சேன்.”
“கவலைப்படுறேன்தான். தானா எதுவும் சரியாயிடாதுல்ல. இதெல்லாம் புரியாம தூய சத்திகள்னு சொல்லிக்கிட்டா உண்மையில மாய சக்திகள்தான், மக்களோட எதிரிகள்தான்.“
“மக்கள் கவனிச்சுக்குவாங்க சார், ஒர்ரி பண்ணிக்காதீங்க, டீ கடை ஓப்பன் பண்ணிட்டாங்க, வாங்க…”
No comments:
Post a Comment