உலகம் முழுவதும் உள்ள அறிவியலா ளர்களாலும் அறிவியல் ஆர்வலர்களாலும் பெரி தும் எதிர்பார்க்கப்பட்ட அந்தஅறிவிப்புபுத னன்று (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டது. 45 ஆண்டுகளாக அறிவியலா ளர்கள் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்ட தன் வெற்றியாக, ‘ஹிக்ஸ் போஸோன்’ என்ற புதிய அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கிறது. “கடவுள் துகள்” என்று அறிவியலாளர் கள் செல்லமாகப் பெயர் சூட்டியிருந்த இந்த அணுத்துகள் ஆராய்ச்சிக்காக, பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள, ‘செர்ன்’ எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் அணுத்துகள் மோதல் ஆய்வுக்கூட உரையரங்கில், நிற்பதற் கும் இடமில்லாத அளவுக்குக் கூடியிருந்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர் கள், செய்தியாளர்கள் ஆகியோர் முன்னிலை யில் இந்தக் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது.யாருடைய பெயர் அந்த அணுத்துகளுக்கு சூட்டப்பட்டிருக்கிறதோ அந்த அறிவியலாளர் பீட்டர் ஹிக்ஸ் இதை அறிவித்தபோது,அனை வரும் பலத்த கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “என் வாழ்நாளிலேயே இந்தக் கண்டுபிடிப்பு நடந்திருப்பது உண்மையிலேயே நம்பமுடி யாத வியத்தகு நிகழ்வுதான்,” என்று கூறிய ஹிக்ஸ், தன் விழிகளில் துளிர்த்த கண்ணீ ரைத் துடைத்துக்கொண்டார். அறிவியலாளர் கள் உணர்சியுள்ள மனிதர்கள்தான் என அந்தக் காட்சி உணர்த்தியது.
அணுத்துகள் பற்றிய அறிவியல் கோட் பாடு பிறந்த காலத்திலிருந்தே, ஏற்கெனவே தெரிய வந்துள்ள நியூட்ரான், புரோட்டான் போல இன்னொரு அணுத்துகள் இருக்கிறது என்ற கருத்து முன்மொழியப்பட்டு வந்தது. ஆனாலும் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அது பெருமளவுக்கு நம்பக்கூடிய ஒரு ஊகமாக மட்டுமே இருந்து வந்தது. உண்மையிலேயே அது இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் தங்க ளுக்கிடையே ஒத்துழைப்புடன் ஆராய்ச்சி யில் ஈடுபட்டுவந்தார்கள். இந்திய அறிவிய லாளர்களும் இந்தப் படையில் உண்டு.
செர்ன் அமைப்பு சார்பாக ஏற்படுத்தப்பட் டிருக்கும் அணுத்துகள் மோதல் கூடத்தில் இறுதிக்கட்ட சோதனைகள் பல முறை நடத்தப்பட்டன. அதில் போதிய தடயங்கள் கிடைத்துள்ளன. அந்தத் தடயங்கள் கிடைத் திருப்பது பற்றி புதனன்று அறிவிக்கப்பட்டது.“எங்களது சோதனைகளில் ஒரு புதிய அணுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்து விட்டோம். அது, ஹிக்ஸ் போஸோன் அணுத் துகளின் தன்மைகள் பற்றி இதுவரையில் அறி வியல் ஊகத்துடன் கூறப்பட்டுவந்துள்ள வரையறைகளோடு பெருமளவுக்கு ஒத்துப் போகிறது,” என்று ஆய்வாளர்கள் தெரிவித் தார்கள்.
ஒரு அறிவியலாளர், “இது வரை ஊகிக்கப் படாத தன்மைகளும் அதில் தென்படுகின் றன. அதனால் நாங்கள் கண்டுபிடித்திருப்பது முற்றிலும் ஒரு புதிய அணுத்துகளாகக் கூட இருக்கலாம்! எப்படியோ அறிவியல் உலகத் தின் சுவைமிகு ஆராய்ச்சி தொடரப்போகிறது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அணுத்துகள் கண்டுபிடிப்பு, நமது பேரண்டம் தொடங்குவதற்கு முன் எதுவும் இருந்ததில்லை, வெறும் சூனியமாகவே இருந் தது என்ற கருத்தை நிராகரிக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல், எங்கும் எப்போதும் பொருள் என்பது இருந்து வந்திருக்கிறது. பொருள் என்பதற்கு ஆதி - அந்தம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது.இந்தக் கண்டுபிடிப்பால் பேரண்டம் உரு வாவதற்கு முன் கருமைப்பொருள் இருந்தது - கருமைப்பொருள், ஒளிப்பொருள் என இருந் தது என்ற கருத்து வலுப்படக்கூடும்.
இதனால், மக்கள் வாழ்வுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பு. பேரண்டத்தையும், உலகத்தையும், வாழ்க் கையையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள் வதற்கு இதுவும் உதவும். இந்த ஆராய்ச்சிக்காகவே உருவாக்கப்பட்ட சோதனைக் கருவிகளும், காந்தப் புலன் கருவிகளும் எதிர் காலத்தில் மருத்துவ சோதனைகளுக்கு மிகவும் பயன்படும்.
பொருளின் “திரட்சி” சுருக்கப்பட்டு, செயல் திறன் அதிகரிக்கப்படும். அதனால் என்ன பயன்? எடுத் துக்காட்டாக இன்று ஒரு ஜெட் விமானம் 200 டன் எடையில் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் கோட்பாடுகளைப் பயன் படுத்துவதன் மூலம், அதே விமானத்தை 20 டன் எடையில் தயாரிக்க முடியும்! இதனால், எரிபொருள் செலவு மிகப்பெருமளவுக்கு சேமிக்கப்படும். வேறு கோள்களுக்கு விண்வெளிக் கப்பல்களை அனுப்புவது என்பது இன்று ஒரு கண் டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு விமானத்தில் செல்வதுபோல் எளிதாகிவிடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொருள் முதல்வாத சிந்தனைகளை உரத்து உரைக்கும் இந்த அணுத்துகள் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
(‘தீக்கதிர்’ ஜூலை 5, 2012 இதழின் ‘தெருவிளக்கு’ பகுதியில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.)
3 comments:
சிறப்பான பதிவு !
உங்கள் பதிவுக்குள் எல்லாம் களஞ்சியங்கள் தான் !
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன். நன்றி !
சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி!
great........
Post a Comment