நண்பரின் மகள் நேற்று (2012, ஜூலை 15) அதிகாலையில் அலைபேசியில் அழைத்தாள். “அங்கிள், நாளைக்கு ஒரு கட்டுரைப் போட்டி வெச்சிருக்காங்க. ‘நேர்மையற்ற வணிக முறை’ன்னு தலைப்புக் கொடுத்திருக்காங்க. வீட்டுல எப்ப இருப்பீங்க? கொஞ்சம் பாயின்ட்ஸ் சொல்லுங்க...”
பள்ளிப்பாடம் சார்ந்தவற்றுக்காக மட்டுமல்லாமல் பொது விசயங்கள் பற்றித் தெரிந்துகொள்வதிலும் அக்கறை உள்ள, பிளஸ் டூ படிக்கிற குழந்தை அவள்.
“காலையில 9 மணி வரைக்கும் வீட்டுலதான் இருப்பேன், அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம்,” என்றேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு அலுவலகம் உண்டு.
“ஓ... காலையிலே 7 மணிக்கு டியூசன் இருக்கு அங்கிள். 6 மணிக்கே வீட்டுலயிருந்து புறப்பட்ருவேன். ஈவ்னிங் எப்ப வருவீங்க”
“உனக்காக வேண்டுமானால் 6 மணிக்கு வந்துவிடுகிறேன்...”
“இல்லை அங்கிள், சண்டேயிலே ஸ்பெஷல் கிளாஸ் வெச்சிருக்காங்க. அது முடிஞ்சு வர்றதுக்கு 7 மணியாயிடுமே...”
“ஸ்பெஷல் கிளாஸ் இன்னிக்குப் போகாம இருந்தா என்ன? இல்லாட்டி சாயங்காலம் பெர்மிஷன் வாங்கிட்டு சீக்கிரமா கிளம்பி வாயேன்...”
“இல்லை அங்கிள். திட்டுவாங்க.” பள்ளியில் முதல் நிலை மதிப்பெண் பெறுகிற மாணவிகளில் ஒருத்தி அவள்.
ஒரு வழியாக இரவு 9 மணிக்கு வந்தாள். நான் சொன்னவற்றைக் குறித்துக்கொண்டு, தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்தது சரியாக இருக்குமா என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டாள்.
“எப்பம்மா இதை உக்காந்து எழுதுவ? காலையிலேயா?”
“இல்லை அங்கிள், டியூசனுக்குப் போயிட்டு அப்படியே ஸ்கூலுக்குப் போகணும். அதனால இப்ப நைட்லயே உக்காந்து எழுதிடுவேன்...”
குழந்தைகளை விளையாட விடாமல், நண்பர்களைச் சென்று பார்த்துப் பேச விடாமல், வீட்டில் கதை-கவிதை படிக்கவிடாமல், தொலைக்காட்சி கூட பார்க்கவிடாமல் டியூசன், ஸ்பெஷல் கிளாஸ், கட்டுரைத் தயாரிப்பு என்று அவர்களின் ஞாயிற்றுக்கிழமைகளை பிக்பாக்கெட் அடிக்கிற தனியார் பள்ளி நிர்வாகங்களை என்ன செய்வது? இது கூட ஒரு நேர்மையற்ற வணிக முறைதானே...

3 comments:
ethu.. kavithai il oru kalavaram.
------------- nalla anugumurai
steps have to be taken at higher level to stop this monotonous attitude of most of the educational institutions....
கூகிள் நண்பர் பட்டியை இணைக்காலமே ! பதிவுகளை பின் தொடர வசதியாக இருக்கும் !
Post a Comment