“நானும் வரலாற்றைப் படிச்சுட்டுதான் உங்க கூட ஆர்கியூ பண்றேன், தெரிஞ்சிக்கிடுங்க.”காலைநடை நிறைவின் பூங்கா உரையாடலில் அண்மை நாட்களாகக் கலந்துகொள்ளும் நண்பர் சொன்னார். இன்றைய பேச்சு கொஞ்சம் சூடேறியதன் தாக்கம் தெரிந்தது. இத்தனைக்கும் இன்று நாங்கள் பேசியது, உள்நாட்டு விவகாரம் அல்ல, காஸா கொலைக்களம் பற்றி.
“படிக்கிறீங்கன்றது மகிழ்ச்சி. ஆனா, படிச்சுட்டுப் பேசறதாலேயே நீங்க சொல்றது உண்மையா இருக்கணும்கிறது இல்லை.”
“அதான பார்த்தேன், புதிர் போடாமப் பேச மாட்டீங்களே! வரலாறு படிச்சுட்டுப் பேசுறாருங்கிறதை அக்ரீ பண்றீங்கன்னா, அவரு உண்மையைச் சொல்றாருன்னுதானே அர்த்தம்?”
இது தொடக்கத்திலிருந்தே உரையாடலில் பங்கேற்கும் கூட்டாளி.
“வரலாற்றுப் புத்தகம் படிக்கிறது முக்கியம். அது யார் எழுதுனதுங்கிறது அதை விட முக்கியம். அப்பதான் அது உண்மையான வரலாறுதானா, இல்லை இட்டுக்கட்டுனதான்னு புரிஞ்சிக்க முடியும்.”
“டூ யூ ஸே ஐ அம் லையிங்? அப்ப நான் உண்மையைச் சொல்லைன்னு சொல்றீங்களா?”
“இல்லை. உண்மையான வரலாற்றைச் சொல்ற புத்தகம் உங்களுக்குக் கிடைக்கலைன்னு சொல்றேன்.”
பாலஸ்தீன நிலவரத்தை விவாதப் பொருளாக்கிய நண்பர், மழைச் சூழலிலும் எழுந்த சூட்டைத் தணிக்க எங்களைத் தள்ளிக்கொண்டு போனார் டீக் கடைக்கு.
No comments:
Post a Comment