காலை நடையில் பூங்கா நிழலில்
சுப காரியங்கள் என்றால் அமாவாசை நாட்களில் பார்க்கக்கூடாது.
காலை நடையின் நிறைவுக் கட்டமான பூங்கா நிழல் அரட்டையில் கைப்பேசியைத் துளாவிக்கொண்டிருந்த நண்பர், ஜாதகம் பார்க்கும்போது செய்யக்கூடாதவை இவையென ஒரு செய்தித் தளத்தில் வந்திருப்பதைத் தெரிவித்தார்.
“எனக்குப் பிரச்சினையில்லை,” என்றேன் நான்.
“மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை வந்திருச்சு? உங்களுக்கு என்ன பிரச்சினை இல்லாமல் போயிருச்சு?” மற்றொரு நண்பர் கேட்டார்.
“ஜாதகமே பார்க்கக் கூடாதுங்கிறவன் நான். அதைப் பார்க்கிறவங்களுக்குத்தானே எப்ப பார்க்கலாம் பார்க்கக்கூடாதுங்கிற விதியெல்லாம்? ஜாதகம் பார்க்காதவங்களுக்கு எப்பப் பார்க்காம இருக்கணும்கிற விதி எதுவும் கிடையாதுல்ல...”
புதிய வீட்டில் குடியேறுவதற்கு நாள், நேரத்தை முடிவு செய்ய ஜாதகம் கொண்டுவந்திருந்த நண்பர் உட்பட எல்லோருமே சிரித்துக்கொண்டே நடந்தோம் தேநீர்க்கடைக்கு.
[0]
#தமிழ் திரட்டி
